அவல் ஆப்பம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்,
இட்லி அரிசி – 1 கப்,
அவல் – 1 கப், உப்பு,
எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

இட்லி அரிசியையும் பச்சரிசியையும் 4 மணி நேரம் ஊற வைக்கவும். அவலை 1/2 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். இட்லி அரிசி, பச்சரிசி, அவல் மூன்றையும் உப்பு சேர்த்து நைசாக அரைத்து 8-10 மணி நேரத்திற்கு புளிக்க வையுங்கள். பிறகு தேவையான நீர் சேர்த்து ஆப்ப மாவு பதத்திற்கு கரைக்கவும். ஆப்பச்சட்டியில் எண்ணெய் தடவி 1/2 மணி நேரம் ஊற விட்டு, ஆப்பங்களாக ஊற்றவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *