சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப், துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்
தேவையான பொருட்கள் :

மணத்தக்காளிக்கீரை – ஒரு கப்
குடமிளகாய் – ஒன்று (சிறியது)
உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு


செய்முறை :

* மணத்தக்காளிக்கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் உளுந்தம்பருப்பு சேர்த்து லேசாகச் சிவந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

* அடுத்து அதில் கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

* பின்னர் குடமிளகாய், புளி, உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கி, இறுதியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி அடுப்பை அணைக்கவும்.

* அனைத்து ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

* சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல் ரெடி.

குறிப்பு :

புளிப்பு, காரத்தை உங்கள் விருப்பத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். இந்தத் துவையலை கெட்டியாக அரைத்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தண்ணீர்விட்டுக் கரைத்தால் இட்லி, தோசைக்கு சட்னி போல மேட்ச் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *