சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்

கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்
தேவையான பொருட்கள் :

ராகி மாவு (கேழ்வரகு) – அரை கப்,
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்,
துருவிய தேங்காய் – ஒரு டீஸ்பூன்,
கேரட் – 1 சிறியது,
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.


தாளிக்க:

நெய் – ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் – அரை டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம் – தேவையான அளவு,
உடைத்த உளுந்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை :

* கேரட்டை துருவிக்கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் கொதிக்க வைத்த தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கரண்டியால் மாவை கெட்டியாக கிளறவும். ஆறியதும் கட்டியின்றி பிசைந்துகொள்ளவும்.

* கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக (பட்டாணி அளவு) உருட்டி, 8 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அதில் ராகி உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி, தேங்காய் மற்றும் கேரட் துருவல், எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.

* சூப்பரான சத்தான கேழ்வரகு சுண்டல் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *