வேர்கடலைத் துவையல் செய்வது எப்படி

வேர்க்கடலையில் புரதச்சத்து, தாது உப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. இன்று வேர்க்கடலை துவையல் செய்முறையை பார்க்கலாம்.

வேர்கடலைத் துவையல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 200 கிராம்,
பூண்டு – 10 பல்,
பெரிய வெங்காயம் – 1,
உப்பு , எண்ணெய் – தேவையான அளவு,
உளுந்து – அரை தேக்கரண்டி,
இஞ்சி – சிறிய துண்டு, கடுகு,
கறிவேப்பிலை – தேவையான அளவு.

செய்முறை :

* மிக்சியில் வேர்க்கடலை, பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு கெட்டி சட்னி பதத்தில் அரைக்க வேண்டும்.

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, உளுந்து, கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* சத்து நிறைந்த வேர்க்கடலை துவையல் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *