பிஸ்தா குல்பி

என்னென்ன தேவை?

பால் – 1 லிட்டர்,
சர்க்கரை – 1/4 கப்,
பிரெட் – 1 பெரிய துண்டு,
பொடித்த பிஸ்தா – 2 ேடபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளோர் மாவு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பிரெட்டின் ஓரங்களை வெட்டவும். நடுப்பகுதியை மிக்சியில் போட்டு அத்துடன் கார்ன்ஃப்ளோர், பால் 1/2 கப் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் மீதியுள்ள பாலை ஊற்றி கொதிக்க வைத்து, அது பாதியாக சுண்டி வரும்வரை காய்ச்சவும். பால் சுண்டியதும் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கைவிடாமல் கிளறவும். பிறகு சர்க்கரை, பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து சர்க்கரை கரைந்ததும் இறக்கவும். ஆறவைத்து குல்பி அச்சு அல்லது டப்பாவில் ஊற்றி மூடி வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *