புளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி

சிலருக்கு புளிப்பு சுவை மிகவும் பிடிக்கும். இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயை வைத்து புளிப்பான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மாங்காய் – 1 பெரியது
தேங்காய்த் துருவல் – அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் – 8
பெருங்காயப் பொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

தாளிக்க :

கடுகு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

செய்முறை :

* மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

* மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

* சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *