ஜின்ஜர் பனீர் ஃப்ரை

என்னென்ன தேவை?

பனீர் – 300 கிராம்,
பிரக்கோலி – 100 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்),
பெங்களூர் தக்காளி – 1 (நறுக்கவும்),
மல்லித்தழை – சிறிது.

எப்படிச் செய்வது?

பனீரை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடங்கள் வேகவிட்டு பனீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அப்பொழுது பனீர் மிருதுவாக இருக்கும். தவாவில் 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பனீர் மற்றும் பிரக்கோலியை நன்கு பொன்னிறமாக வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.

அதே தவாவில் மீதியுள்ள நல்லெண்ணெயை விட்டு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூளை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு பனீர் மற்றும் பிரக்கோலியை சேர்த்து கிளறவும். தண்ணீர் வற்றும்வரை கிளறி மல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *