சத்தான டிபன் சாமை அரிசி உப்புமா

காலை, மாலை, இரவு நேரங்களில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சாமை அரிசியில் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.

சத்தான டிபன் சாமை அரிசி உப்புமா
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – ஒரு கப்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கேரட் – 1
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
உப்பு – தேவைகேற்ப
கறிவேப்பில்லை – சிறிதளவு.

செய்முறை :

* கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம், கேரட் நன்றாக வதங்கியதும் வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும்.

* சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *