தேன் குழல் (முறுக்கு)

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 1/4 கிலோ
உளுந்து – 600 கிராம்
ரீபைண்டு ஆயில் – 3 ஸ்பூன்
வெண்ணெய் – 1 ஸ்பூன்


எப்படிச் செய்வது?

முதலில் பச்சரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு 4, 5 தடவை தண்ணீர் ஊற்றி களைய வேண்டும். இதனை ஓலைக்கூடையில் போட்டு தண்ணீரை நன்கு வடிகட்ட வேண்டும். இப்போது ஈரப்பதமுள்ள பச்சரிசியை ஒரு வேஷ்டியில் போட்டு 4 நாட்கள் நிழலில் உலர்த்தவும். தினமும் கிளறியும் விட வேண்டும். வாணலியில் 2 கைப்பிடி உளுந்தை போட்டு, மிதமான தீயில் வறுக்க வேண்டும். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக முழு உளுந்தையும் வறுக்க வேண்டும். மொறுமொறு பதத்தில் உளுந்து இருக்க வேண்டும்.

வறுத்த உளுந்து, காய்ந்த அரிசி இரண்டையும் மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து நைசாக அரைக்க வேண்டும். (முக்கியம் : கோதுமை, கம்பு போன்ற தானியங்கள் அரைத்த பிறகு அரைக்கக்கூடாது). அரைத்தவுடன் நன்றாக ஆற வைக்கவும். இப்போது மாவுடன், தேவையான அளவு தண்ணீர் (சப்பாத்தி பக்குவத்தில்) சேர்த்து பிசையவும்.

இப்போது ரீபைண்டு ஆயில், வெண்ணையையும் சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை ஓரமாய் வைத்து விட்டு, வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், முறுக்கு கட்டையில் தேன்குழல் அச்சு போட்டு, அதில் மாவையிட்டு கொஞ்சம், கொஞ்சமாக எண்ணெயில் பிழியவும். அவ்வளவுதான்… சுவையான தேன்குழல் ரெடி… செய்முறை சிம்பிளாய்த்தான் இருக்கும். சாப்பிட்டு பாருங்க… அப்புறம் வீட்ல அடிக்கடி தேன்குழல்தான் செய்வீங்க…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *