முலாம்பழ ஐஸ்க்ரீம்

என்னென்ன தேவை?

முலாம்பழ விழுது – 2 கப்
பால் – 250 மில்லி (காய்ச்சி ஆற வைத்தது)
கண்டன்ஸ்டு மில்க் – 200 கிராம்
பால் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி சிரப் – 2 டேபிள்ஸ்பூன்


எப்படிச் செய்வது?

முதலுல் முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கி விட்டு சிறிது துண்டுகளாக வெட்டி வைக்கவும். பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் முலாம்பழ விழுதுடன் பால், கண்டன்ஸ்டு மில்க், பால் பவுடர், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பீட்டரால் அடிக்கவும்.

பின் ஒரு டப்பாவில் ஊற்றி மூடி ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து மீண்டும் பீட்டரிலோ அல்லது மிக்ஸியிலோ போட்டு அடித்து டப்பாவில் ஊற்றி மூடி 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். நன்றாக செட் ஆனவுடன் மேலே ஸ்ட்ராபெர்ரி சிரப் ஊற்றிப் பரிமாறவும்.

குறிப்பு: இரண்டு முறை ஐஸ்க்ரீமை வெளியே எடுத்து பீட்டரால் அடிப்பதால் ஐஸ்க்ரீம் மிருதுவாகவும், க்ரீமியாகவும் வரும். விரும்பினால் பாதாம், பிஸ்தா பருப்புகளைச் சேர்த்துப் பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *