பொரிச்ச மிளகாய் சம்பல்

தேவையான பொருட்கள்

தேங்காய் – பாதி

செத்தல் மிளகாய் – 10

சின்ன வெங்காயம் – 8

கறிவேப்பிலை – 1 நெட்டு

இஞ்சி – 1/2 இன்ச் (விரும்பினால்)

உப்பு – தேவையான அளவு

செய்முறை :-

* செத்தல் மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணையில் (கருகாமல்) பொரித்து எடுக்கவும்.

*கிரைண்டரில் முதலில் பொரிச்ச செத்தல் மிளகாய்,உப்பு ,வெங்காயம்,இஞ்சி போட்டு நன்றாக அரைக்கவும்.

* அடுத்து கறிவேப்பிலையையும் போடவும்.

* நன்றாக மிளகாய், வெங்காயம்,கறிவேப்பிலை அரைபட்டு சேர்ந்ததும், தேங்காய்ப்பூ சேர்த்து அரைக்கவும்.

* குறிப்பு : இதனை இடியாப்பம்,புட்டு, பாண் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *