ருசியான மினி ஜாங்கிரி செய்முறை…!

தேவையான பொருட்கள் :

உளுந்து – 200 கிராம்

அரிசி மாவு – 25 கிராம்

கேசரி பவுடர் – கால் தேக்கரண்டி

உப்பு ஒரு சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

சர்க்கரைப் பாகு செய்ய:

சர்க்கரை – 200 கிராம்

தண்ணீர் – 100 மில்லி

குங்குமப்பூ – சிறிதளவு

ஆரஞ்சு ஃபுட்கலர் – ஒரு சிட்டிகை

பன்னீர் (சுத்தமானது) – 2 தேக்கரண்டி

செய்முறை:

உளுந்தை ஊறவைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலக்கி ஒரு பாத்திரத்தில் அரை மணி நேரம் மூடி வைக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பாகு காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ, பன்னீர், ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து இறக்கி ஆறவிடவும்.

அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, ஜாங்கிரி பிழிவதற்காக இருக்கும் துளையிட்ட காடா துணியில் (ரிட்) மாவுக் கலவையை நிரப்பி, எண்ணெயில் சிறிய ஜாங்கிரிகளாக பிழியவும் (வேகமாகப் பிழிய வேண்டும்). மிதமான சூட்டில் வெந்தவுடன் எடுத்து, செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஜாங்கிரி பிழிவதற்கான `ரிட்’ கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கிறது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *