சுவையான பாசிப்பருப்பு போளி எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

மைதா மாவு – ஒரு கப்,
பாசிப்பருப்பு, வெல்லத்தூள் – தலா முக்கால் கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
நெய் – தேவையான அளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் விட்டுச் சற்றுத் தளர்வாகப் பிசையவும். இதன் மேல் நல்லெண்ணெயைத் தடவி… இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பை குழைய வேகவிட்டு எடுக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து… வேகவைத்த பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் போட்டுக் கிளறவும். நன்றாக சுருள வரும்போது ஏலக்காய்த்தூள், நெய் விட்டுக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாழை இலை அல்லது பால் கவரின் மீது சிறிது எண்ணெயைத் தடவவும். பிசைந்து வைத்த மாவிலிருந்து சிறு எலுமிச்சைப் பழ அளவு எடுத்து, அதன் மீது வைத்து கை விரல்களால் அழுத்தம் கொடுத்துச் சின்ன வட்டமாகப் பரப்பி… நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி, திரும்பவும் கை விரல்களால் அழுத்திப் பெரிதாக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, செய்து வைத்திருக்கும் போளியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *