சுவையான தினை மாவு பூரி

தேவையானப் பொருட்கள்:
தினைமாவு – 200 கிராம்
கோதுமை மாவு – 50 கிராம்
அரிசி மாவு – 25 கிராம்
சீரகம் – 2 தேக்கரண்டி
நெய் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தினை, கோதுமை, அரிசி மாவுகளை நன்றாக கலக்கவும். சீரகம், உப்பு, நெய் ஆகியவற்றை அதில் சேர்த்து, பூரி மாவு போல், பிசைந்து கொள்ளவும். பத்து நிமிடத்திற்குப் பின், மாவை சிறு உருண்டைகளாக்கி, பூரி போல் வார்த்துக் கொள்ளவும். அவற்றை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்; சுவையான தினைமாவு பூரி தயார். அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *