சுவையான பாஸ்தா பிரியாணி எப்படி செய்யுறது என்று பாப்போம்

குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான காரசாரமான பாஸ்தா பிரியாணி
தேவையான பொருட்கள் :
பென்னே பாஸ்தா – 200 கிராம்

 குடைமிளகாய் – 1
கேரட்இ பீன்ஸ் – 1ஃ4 கப்இ
வெங்காயம் – 2
தக்காளி – 2
கொத்தமல்லி – 1ஃ2 கட்டு
புதினா – 1ஃ2 கட்டு
தயிர் – 2 கப்இ
உப்பு – தேவைக்குஇ
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்இ
கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்இ
தனியா தூள் – 2 டீஸ்பூன்இ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்இ
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்.
தாளிக்க…
எண்ணெய் – தேவையான அளவு
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்இ
சோம்பு – 2 டீஸ்பூன்இ
பட்டை – 2இ
கிராம்பு – 2இ
பிரிஞ்சி இலை – 2.
செய்முறை :
குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம்இ தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லிஇ காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
கடாயில் எண்ணெய்இ வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள்இ உப்புஇ கொத்தமல்லிஇ புதினாஇ குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
இப்போது மிளகாய்த் தூள்இ தனியா தூள்இ மஞ்சள் தூள்இ கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.
மசாலாப் பொருட்கள்இ காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
சூப்பரான பாஸ்தா பிரியாணி ரெடி.
சிப்ஸ்இ பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *