கத்திரிக்காய் துவையல் எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 250 கிராம் (வதக்கவும்),
புளி – எலுமிச்சையளவு (ஊறவைக்கவும்),
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்.

வறுக்க:

காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப),
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, புளி, வதக்கிய கத்திரிக்காய், சேர்த்து, அம்மி யிலோ, மிக்ஸியிலோ கொரகொரப்பாக அரைக்கவும். நல்லெண்ணெய் கலந்து பரிமாறவும்.
சூடான சாதம் – கத்திரிக்காய் துவையல் – சுட்ட அப்பளம் காம்பி னேஷன், சுவையில் அசத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *