தக்காளி ஜாம் எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

தக்காளி – 250 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் சிறிது வற்றியதும், சர்க்கரை, இஞ்சி பேஸ்ட் சேர்த்து, நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: பிரெட், சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.


பலன்கள்:

தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், கேன்சர் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியது. பசியைத் தூண்டி, வாய்க் கசப்பைப் போக்கும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *