ருசியான மீன் கட்லட் செய்வது எப்ப‍டி?

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி?

உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய

வகைகள் இருந்தாலும், குறிப்பாக மீன் கட்லட் ( Fish Cutlet ) என்பது அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த‍மானது எனலாம். அந்த மீன் கட்லட் ( #FishCutlet ) செய்முறையை இங்கு காண்போம்.

சூப்பரான டேஸ்டில் மீன் கட்லட் செய்ய…! தேவையான பொருட்கள்:

மீன் ( Fish ) – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு ( Potato ) – 2
சின்ன வெங்காயம் ( Small Onion )- 100 கிராம்
பச்சைமிளகாய் (Green Chilly )- 5
சீரகத்தூள் ( Cumin powder )  – 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் ( Pepper Powder ) – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் ( Red Chilly Powder ) – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது ( Ginger, Garlic ) – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை ( Coriander Leaves ) – 1 கொத்து
புதினா இலை ( Mint Leaves ) – 1 கொத்து
ரஸ்க் தூள் ( Rusk Powder ) – 4 (தூள் செய்யப்பட்டது
முட்டை ( Egg ) – 4
எலுமிச்சை சாறு ( Lemon Juice ) – 1/2 ஸ்பூன்
உப்பு ( Salt ) – தேவையான அளவு
எண்ணெய் ( Oil ) – தேவையான அளவு

செய்முறை:

மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவு ம். வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுவிழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மு‌ட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வா‌ய் அக‌‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித் தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *