அன்னாசி வெந்தயப் பணியாரம் எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 200 கிராம்,
அன்னாசிப் பழம் நறுக்கிய துண்டுகள் – ஒரு கப்,
வெந்தயம், உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய்- 100 மி.லி,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பை ஒன்றாக ஊறவைத்து, நைஸாக அரைக்கவும். அன்னாசித் துண்டுகளைத் தனியாக அரைத்துக் கலக்கவும். உப்பு சேர்த்துக் கலந்து, பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, மாவை ஒரு சிறு கரண்டியால் ஊற்றி, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: சாஸ் அல்லது சட்னி சிறந்த காம்பினேஷன்.


பலன்கள்:

கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள், நார்ச்சத்து நிறைந்திருக்கின்றன. வெந்தயத்தில் நார்ச்சத்து மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்று வலி உள்ளவர்கள், இதய நோயாளிகள் சாப்பிட ஏற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *