ருசியான சென்னா சாலட் எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

கறுப்புக் கொண்டைக்கடலை – கால் கப்,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி, கேரட் – தலா 1,
தேங்காயத் துண்டுகள் – ஒரு டேபிஸ்ஸ்பூன்,
உப்பு, எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு.


செய்முறை:

கொண்டைக்கடலையை முளைகட்டி, வேகவைத்துக்கொள்ளவும். தக்காளி, கேரட், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடலையுடன் தக்காளி, காய்கறிகளைக் கலந்து, தேங்காய்த் துண்டுகளைச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு கலந்து, உப்பு தூவினால் சாலட் ரெடி.


பலன்கள்:

அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. அதிக அளவில் புரதச்சத்து கொண்டது. கறுப்புக் கொண்டைக் கடலை, கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயம் மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்திறன் மேம்பட உதவும். இதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட் போன்ற காயகறிகள் சேரும்போது, பலன் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *