உங்களுக்கு தெரியுமா இடியாப்ப வடாம் எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

இடியாப்ப மாவு – 2 கப்,
பச்சை மிளகாய் – 4 (விழுதாக அரைக்கவும்),
தண்ணீர் – 3 கப், உப்பு,
பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்.


செய்முறை:

தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். இதில் பச்சை மிளகாய் விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, இடியாப்ப மாவைப் போட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும். இட்லிப் பானையில் அடியில் ஒரு கப் நீர் விட்டு, அதன் மேல் இட்லி தட்டு வைத்து, எண்ணெய் தடவி (அ) துணி போட்டு, ஓமப்பொடி அச்சில் வெந்த இடியாப்ப மாவை போட்டு ஒவ்வொரு இட்லி குழியிலும் பிழிந்து மூடி வைத்து, 10-15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதை பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு, வெயிலில் காயவிட்டு எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *