முந்திரி கிவி குருமா எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

வெங்காயம் (நறுக்கியது) ஒரு கப்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை அரை கப்,
கிவி பழம் – 2 (அரைக்கவும்),
தேங்காய்ப்பால் ஒரு கப்,
முந்திரி – 4 டேபிள்ஸ்பூன் (வேகவைக்கவும்),
கெட்டித் தயிர் அரை கப்,
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்),
கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள் தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் சிறிதளவு,
உப்பு தேவைக்கேற்ப.


செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், அரைத்த கிவிப்பழக் கூழ், உப்பு சேர்த்து வதக்கி, கெட்டித் தயிரைச் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் வேகவைத்த முந்திரி சேர்த்து நன்கு வதங்கியதும், தேங்காய்ப் பாலை ஊற்றி நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து, பின்பு கொத்தமல்லித் தழையைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *