சுவையான குண்டூர் சிக்கன்!…

ஆந்திரா குண்டூர் சிக்கன் செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
காய்ந்த சிவப்பு மிளகாய் – 6 (காரம் அவரவர் விருப்பம்)
தனியா – 3 தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை)
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 150 கிராம்
புளிக்காத தயிர் – 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவைக்கு.

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கி வாசனை வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா மற்றும் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் தீயை மிதமாக வைத்து வேக விட வேண்டும். அடிக்கடி திறந்து பிரட்டி விட வேண்டும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.

சிக்கன் வெந்த பின்னர் மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.

சுவையான குண்டூர் சிக்கன் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *