மட்டன் சூப் | mutton soup

தேவையான பொருட்கள்

மட்டன் – கால் கிலோ
மிளகு தூள் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி -2
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு எண்ணெய்-தேவையான அளவு
மல்லி இலை – தாளிக்க

 

செய்முறை

மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, போட்டுத் தாளித்து தனியே வேக வைத்த மட்டனை அதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மிளகு தூள் மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான மட்டன் சூப் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *