கேரட் பிரியாணி

தேவையான பொருட்கள்

எண்ணெய், நெய் – 1/2 கப்,
பட்டை – 1,
கிராம்பு – 2,
பிரியாணி இலை – 1,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
மல்லித்தூள் – 1/2,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
தக்காளி – 2, கேரட் – 1 கப்,
பீன்ஸ் -1/2 கப்,
காலிஃப்ளவர் – 1/2 கப்,
உருளைக்கிழங்கு – 1/2 கப்,
பட்டாணி – 1/2 கப்,
தயிர் – 1/2 கப்,
கொத்தமல்லி, புதினா – 1 கப்,
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ,
உப்பு – தேவைக்கு.

செய்முறை

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் கலந்து வதக்கவும். பின் தக்காளி, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின் தயிர் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி, புதினா சேர்த்து கொதி வந்தவுடன் பாஸ்மதி அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து 20 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். பின் சுவையான கேரட் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *