ஸ்பைசி டோஸ்ட்

என்னென்ன தேவை?

பிரெட் துண்டுகள் – 10.

சட்னி செய்ய…

பாசிப் பருப்பு – 1/2 கப் (2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்),
இஞ்சி – 1 அங்குலத்துண்டு,
பச்சை மிளகாய் – 2,
பூண்டு – 3 பல்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி சாஸ் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பிரெட் துண்டில் இருபுறமும் வெண்ணெய் தடவவும். சட்னி செய்ய கொடுத்த பொருட்களை கொரகொரப்பாக அரைத்து அந்த விழுதை பிரெட் நடுவே தடவி டோஸ்ட் செய்யவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *