பீட்சா சாஸ்

என்னென்ன தேவை?

தக்காளி – 4 (பெரியது),
உலர்ந்த ஓரிகானோ – 1 டீஸ்பூன்,
உலர்ந்த பேசில் இலைகள் – 1 டீஸ்பூன்,
நசுக்கிய பூண்டு – 6 பல்,
ஆலிவ் ஆயில் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

தக்காளியை விழுதாக்கிக் கொள்ளவும். அத்துடன் மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு தீயைக் குறைத்து 8 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். ஆறியதும் சுத்தமான பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைத்து 1 வாரம் வரை கூடப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *