சமோசா செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 1 கப்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப,
நெய் – 1 டீஸ்பூன்,
பன்னீர் – 50 கிராம்,
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,
சாட் மசாலா, உப்பு,
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப.

செய்முறை :

* மைதா மாவுடன் உப்பு, நெய் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

* பன்னீரை துருவி அதன் மேல் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.

* பிசைந்து வைத்துள்ள மைதா மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரியாகத் திரட்டி மத்தியில் சிறிது பன்னீர் மசாலாவை வைத்து சமோசா வடிவத்தில் மடக்கி ஓரங்களில் சிறிது தண்ணீர் கொண்டு ஒட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான பன்னீர் சமோசா ரெடி.

குறிப்பு :

* பன்னீரை பொடியாக நறுக்கியும் போடலாம். விருப்பப்பட்டால் காய்கறிகளையும் உடன் சேர்த்து செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *