பஞ்சாபி ரிச் சாவல் கீர் வித் நட்ஸ் அண்டு ட்ரை ஃப்ரூட்ஸ்

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – 1/2 கப்,
பால் – 1 லிட்டர்,
கன்டென்ஸ்டு மில்க் – 1/2 டின்,
பிஸ்தா, வால்நட்ஸ், உலர்ந்த திராட்சை, பாதாம்,
முந்திரி அனைத்தும் தேவைக்கு,
ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ – தேவைக்கு,
சர்க்கரை – 1/2 கப் அல்லது தேவைக்கு,
நெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் நட்ஸை வறுத்து, பின் உடைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவிக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் பாதி பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். 1 முதல் 2 விசில் வந்தால் போதும். பின் ஆறியதும் திறந்து மீதி உள்ள பால் சேர்த்து மேலும் காய்ச்சவும். இது பாயசம் பதம் வந்ததும் சர்க்கரை சேர்க்கவும். ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்த்து இத்துடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து இது கெட்டியாக பாயசம் பதம் வந்ததும் இறக்கி, வறுத்து உடைத்த நட்ஸையும், டிரை ஃப்ரூட்ஸையும் சேர்த்து பரிமாறவும். இதனை குளிர வைத்துப் பரிமாறவும். மேலும் மேலும் வாங்கி சாப்பிட வைக்கும் இந்த கீர் மிக ருசியாகவும், ரிச்சாகவும் இருக்கும். சிறிது நட்ஸை நெய்யில் வறுத்து அலங்கரிக்கலாம்.

குறிப்பு: சிலர் அரிசியை குக்கரில் வைக்காமல் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலில் வேகவிட்டு செய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *