தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

பீச் சுண்டல் என்று அழைக்கப்படும் தேங்காய், மாங்காய் மற்றும் வெள்ளை பட்டாணி சேர்த்து செய்யப்படும் சுண்டலை பலரும் கடற்கரை செல்லும் போது சுவைத்திருப்போம். ஆனால் அதை வீட்டில் செய்து சுவைத்ததுண்டா?

சரி, இப்போது அந்த தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: வெள்ளை பட்டாணி – 1 கப் துருவிய மாங்காய் – 5 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு… கடுகு – 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் வெள்ளை பட்டாணியை குறைந்தது 6-8 மணிநேரமாவது ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் சிறிது உப்பு தூவி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் வெள்ளை பட்டாணியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் துருவிய மாங்காய், தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் தயார்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *