சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா

பார்லியில் கஞ்சி செய்து சாப்பிடுவதற்கு பதிலாக வெஜிடபிள் உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா
தேவையான பொருட்கள் :

பார்லி – 1 கப் (மிக்சியில் உடைத்து கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 1
கேரட் – 1
பீன்ஸ் – 10
ப.மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அதில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக வதக்கிய பின் அதில் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* காய்கறிகள் சிறிது வதங்கியதும் அதில் உடைத்த பார்லியை போட்டு நன்கு வதக்கி உப்பு கலந்து 3 கப் நீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.

* பார்லி வேக சிறிது நேரம் எடுக்கும். நன்கு வெந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.

* சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா ரெடி.

* குக்கரில் அனைத்து பொருட்களையும் போட்டு மூன்று விசில் வைத்து வேக வைத்தும் எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *