சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்

அதிகளவு சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பாசிப்பருப்பை வைத்து எளிய முறையில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்
தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, 2 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

* கடைசியாக இறக்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *