மாலை நேர டிபன் ரவா கிச்சடி

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ரா கிச்சடி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரவா கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர டிபன் ரவா கிச்சடி
தேவையான பொருட்கள் :

ரவை – 250 கிராம்,
பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) – ஒரு கப்,
கேரட் – ஒன்று,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – ஒன்று,
வெங்காயம் – 1
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
வறுத்த முந்திரிப்பருப்பு – 10,
நெய் – 50 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* வெங்காயம், கேரட், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் பட்டாணி, மஞ்சள் தூள், கேரட்டை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.

* காய்கள் வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர்(ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில்) ஊற்றி கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கலக்கவும்.

* தேவையான உப்பு சேர்த்து, அனைத்து நன்றாக வெந்ததும் கிளறி இறக்கவும்.

* மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவி பரிமாறவும்.

* சூப்பரான மாலை நேர டிபன் ரவா கிச்சடி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *